உடல் உறுப்பு தான சம்மந்தமான கதை படங்ளில் நடிப்பது ஏன்? சரத் பேட்டி
மலையாளத்திலிருந்து தமிழில் ரீமேக் ஆகும் உடல் உறுப்புதான படத்தில்
நடிக்கிறார் சரத்குமார். மூளைச் சாவு அடைந்த ஒருவரின் உடல் உறுப்புகளை
உயிருக்காக போராடிக்கொண்டிருக்கும் வேறு ஒருவருக்கு பொருத்துவதற்காக
போக்குவரத்து நிறைந்த சாலையில் உறுப்புகளை ஆம்புலன்சில் எவ்வளவு
போராட்டங்களுக்கு இடையில் எடுத்துச் செல்கிறார்கள் என்ற கருவை மையமாக
வைத்து ‘டிராபிக்’ என்ற மலையாள படம் உருவானது. இப்படம் தமிழில் ரீமேக்
ஆகிறது. இதில் போலீஸ் அதிகாரி வேடத்தில் சரத்குமார் நடிக்கிறார்..
இது குறித்து சரத்குமார் கூறுகையில் உடல் உறுப்பு தானம் பற்றிய கதை
என்பதால் நடிக்க ஒப்புக்கொண்டேன். எனது உடல் உறுப்புகளை ஏற்கனவே
குருவாயூரில் உள்ள தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு தானம் அளித்திருக்கிறேன்.
சென்னையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்துத்தான் இக்கதை
மலையாளத்தில் உருவாக்கப்பட்டது. ஒரு உயிரை காப்பாற்றுவதற்காக தங்களது சொந்த
கஷ்டங்களை மறந்து கடமையை எவ்வாறு நிறைவேற்றுகிறார்கள் என்பதை கதை
உணர்த்தும். சேரன், பிரகாஷ்ராஜ், ராதிகா, ரம்யா நம்பீசன். லட்சுமி
ராமகிருஷ்ணன், கிட்டி, சச்சின் என பலர் நடிக்கின்றனர். இதன் ஷூட்டிங்
வேகமாக நடக்கிறது. சாஹித் காதர் இயக்கம். மேஜர் ஜோசப் இசை. மேஜிக்
பிரேம்ஸ், ஐ பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்துக்கு பொருத்தமான
தலைப்பு தேர்வு செய்து வருகிறோம் என்று கூறினார் ...